சென்னை: கரோனா தொற்று காலத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு கரோனா ஊக்கத் தொகையாக, ரூ. 5 ஆயிரம் வழங்குவதற்காக ரூ.58.59 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா தொற்று காலத்தில் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை 1,17,184 காவலர்களுக்கு கரோனா தொற்று ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு ரூ.58 கோடியே 59 லட்சம் ஒதுக்கி தமிழ்நாடு அரசு இன்று(ஜூன்.18) உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: தொழிற்கல்வி - அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு