ETV Bharat / state

’கரோனா காலத்தில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு நன்றி!’ - tambaram news

சென்னை: கரோனா காலத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு, சமூக ஆஆர்வலர் ஒருவர் நான்கு கட்டைக் கால்களுடன் வேடமிட்டு வித்தியாசமான முறையில் நன்றியைத் தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள்,துப்புரவு பணியாளர்களுக்கு நன்றி

author img

By

Published : May 21, 2021, 5:33 PM IST

சென்னை, தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் பகுதியில் உள்ள அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் மதன் (37). இவர் சமூக ஆர்வலர். சென்னை தி நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் வெரைட்டி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.

இவர் சில ஆண்டுக்கு முன்பு காற்று நுழைய முடியாத ஸ்ப்ரிங் பலூனில் தலையில் நுழைத்து சுமார் ஒருமணி நேரம் மூச்சை அடக்கி சாதனை படைத்திருந்தார். இதனைப் பாராட்டி தமிழ்நாடு பல்கலைகழகம் மதனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

தற்போது, கரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு விதமாக இவர் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்துள்ளார். உயர்ந்த மனிதன் போல் வேடமிட்டும், டிராகன் போன்ற உருவம் பொறித்த ஆடை அணிந்து கொண்டு கரோனாவை விரட்டுவது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை அவர் ஏற்படுத்தி உள்ளார்.

அரசு ஊழியர்கள்,துப்புரவு பணியாளர்களுக்கு நன்றி
முன்னதாக இவர், கரோனாவில் இருந்து நம்மைப் பாதுகாக்கப் பணியாற்றிய மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவ அவசர ஊர்தி ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல் துறையினர், தொண்டு நிறுவனங்கள் இவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க திட்டமிட்டிருந்தார்.
அதன்படி நேற்று (மே.21) தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து சானிடோரியம் பேருந்து நிலையம் வரை நான்கு கட்டை கால்களுடன்(stild walk) வித்தியாசமான முறையில் வேடமிட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் உடை அணிந்து, வித்தியாசமான முறையில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருக்கும் துப்புரவு தொழிலாளர்களுக்கு நுங்கு வழங்கினார்.
மேலும், போக்குவரத்துக் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இணைந்து கரோனா வேகமாகப் பரவி வரும் சூழ்நிலையில் தேவையின்றி யாரும் வெளியே சுற்ற வேண்டாம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.