சென்னையைச் சேர்ந்த சரவணன் என்பவர் பணிக்கு செல்லும்போது சாலை விபத்து ஏற்பட்டு வலது இடுப்பு மூட்டு விலகி இடுப்பு எலும்புகள் முறிவு ஏற்பட்டது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதேபோன்று 24 வயதான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ் சாலை விபத்தில் அடிபட்டு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அவரும் தனியார் மருத்துவமனையில் முதலுதவி எடுத்துக்கொண்டு, பின்னர் மீண்டும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவர்கள் இருவருக்கும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் எலும்பு மற்றும் முடநீக்கியல் துறை தலைவர் பேராசிரியர் தொல்காப்பியன் ஆலோசனைப்படி பேராசிரியர் டாக்டர் அசோகன் தலைமையில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பொது அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் கொண்ட குழு, இரண்டு கட்டங்களாக அறுவை சிகிச்சை செய்தது. மூன்று மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், இறுதியாக சிகிச்சை வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.
தற்போது பிரகாஷ் மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் தனியார் மருத்துவமனையில் 15 லட்சம் வரை செலவாகக்கூடிய அறுவை சிகிச்சையை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டதாக மருத்துவமனையின் முதல்வர் பேராசிரியர் பாலாஜி தெரிவித்தார்.
இதையும் படிங்க: துரோணாச்சாரியார் விருதுபெற்ற தெலங்கானா ஆளுநரின் கணவர்: வியக்கவைக்கும் சௌந்தரராஜன்!