சென்னையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், அரசு துறைகளில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் செல்வம் செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ”2016ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பவும் அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியத்தில் பணிபுரியும் அனைவருக்கும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளைஞர்கள் வேலைவாய்ப்பினைப் அழிக்கும் ஆதிசேஷாவின் தலைமையிலான பணியாளர் சீரமைப்புக் குழு பரிந்துரைகளை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள நான்கரை லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்” என்த் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
'அடிக்கிற அடியில் சனாதான கட்சி தமிழ்நாட்டின் பக்கமே தலைவைத்து படுக்கக்கூடாது' - திருமாவளவன் தாக்கு!