சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து, அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கொழும்புவில் இருந்து வந்த நான்கு பேர், சிங்கப்பூரிலிருந்து வந்த மூன்று பேர், துபாய்லிருந்து வந்த இரண்டு பேர் என ஒன்பது பேரை அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அவர்களிடமிருந்து மொத்தம் ரூ. 1 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ 678 கிராம் தங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இரண்டு பயணிகளிடமிருந்து ரூ. 81 ஆயிரம் மதிப்புள்ள பயன்படுத்தப்பட்ட லேப்டாப்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.