சென்னை: குவைத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றனர். பின்னர் அந்த விமானத்தை அடுத்த பயணத்திற்காக சுத்தப்படுத்த விமான பணியாளர்கள் சென்றனர்.
அப்போது விமான கழிவறையிலுள்ள தண்ணீர் தொட்டியில், கருப்பு பிளாஸ்டிக் கவர் ஒன்று இருந்ததை கண்டுள்ளனர். பின்னர் இது குறித்து விமான பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விமானத்திற்குள் சென்ற பாதுகாப்பு அலுவலர்கள், அந்த கவரை ஆய்வு செய்தனர். அப்போது அதில், எட்டு தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து விமானநிலைய சுங்கத்துறையிடம் தங்கக்கட்டிகளை ஒப்படைத்தனா். எட்டு தங்கக்கட்டிகளும் மொத்தம் 800 கிராம் எடை இருந்தன. அதன் சா்வதேச மதிப்பு ரூ.38.32 லட்சம். இதுபற்றி வழக்குப்பதிவு செய்து, விமானத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் விமானநிலைய வருகை பகுதி சிசிடிவி காட்சிகளை சுங்க துறையினர் ஆய்வு செய்தது வருகின்றனர்.
இதையும் படிங்க: பல பெண்களை ஏமாற்றிய சென்னை மாடலுக்கு ஜாமீன் மறுப்பு