சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, விமானங்கள் மூலம் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஷேக் முகமது(23) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால், அவரது உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது, ஷேக் முகமது உள்ளாடைக்குள், தங்கத்தை உருக்கி உருளை வடிவில் மறைத்து வைத்து, கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்து ரூ. 18.6 லட்சம் மதிப்புள்ள 473 கிராம் தங்கத்தை சுங்கத் துறை அலுவர்கள் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: 'செக்கிங்கைப் பார்த்து தெறித்து ஓடிய கொரிய இளைஞர்' - பையில் இருந்த 4 கிலோ தங்கம்!