தங்கம் விலை வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்துவந்த நிலையில் இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (ஜனவரி 20) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் நான்காயிரத்து 581 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை நான்காயிரத்து 547 ரூபாயாக இருந்தது.
இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 34 ரூபாய் உயர்ந்துள்ளது. சவரனுக்கு 272 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நான்காயிரத்து 581 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்தே காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ.67.80 விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 1.400 உயர்ந்து 68.80 விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : பூலாம்பாடி அதிமுக நகரச் செயலாளர் பாலியல் புகாரில் கைது