சென்னை: சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. இதனிடையே குறையவும் செய்தது. இந்த நிலையில் இன்று(ஜனவரி 7) தங்கம் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 31 ரூபாய் அதிகரித்து ரூ.5,221-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி சவரனுக்கு ரூ. 248 அதிகரித்து ரூ.41,768-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 90 பைசா அதிகரித்து, ரூ.74.40-க்கு விற்பனையாகிறது. கிலோவுக்கு ரூ.900 அதிகரித்து ரூ.74,400 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: Gold Rate Today: தங்கம், வெள்ளி விலை திடீர் சரிவு!