ETV Bharat / state

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இனி ஏறுமே ஒழிய இறங்காது! - புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

சென்னை : சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் தங்க முதலீடுகளில் ஆர்வம் காட்டுவதால் தங்கத்தின் விலை இன்று 872 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

Gold prices hit the new peak
புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இனி ஏறுமே ஒழிய இறங்காது!
author img

By

Published : Mar 6, 2020, 11:14 PM IST

நேற்று கிராம் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 122 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 4 ஆயிரத்து 231 ரூபாயாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 33 ஆயிரத்து 848 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் நேற்றைய விலையைவிட இன்று 872 ரூபாய் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசிய இந்திய தங்க நகை வியாபாரிகள் சங்க மாநில செயலாளர் சாந்தகுமார், “கடந்த சில நாட்களாக சீராக இருந்த தங்கம் விலை தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவருகிறது. இந்திய ரூபாய்க்கு நிகராக 70 ரூபாயாக இருந்த அமெரிக்க டாலர் தற்போது 73.85 ரூபாயாக உள்ளது. இதுவும் தங்க விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை ஆகியவை சரிந்து வரும் நிலையில் தங்கத்தின் மதிப்பு மட்டுமே உயர்ந்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளனர். இதனால் தான் தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இனி வரும் நாட்களில் ஒரு சவரன் தங்கம் 40 ஆயிரம் ரூபாய் தொடும் என பொருளாதார நிபுணர்கள், வியாபாரிகள் கூறுகின்றனர். தங்கம் விலை உயர்வால் நகைத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலில் நேரடியாக 1 கோடி பேரும், மறைமுகமாக 5 கோடி பேரும் ஈடுபட்டுள்ளனர். தங்கம் விலையை குறைக்க அதன் மீதான இறக்குமதி வரியை அரசு குறைக்க வேண்டும். தங்கத்துக்கு தற்போது 16 விழுக்காடுவரை வரி விதிக்கப்படுகிறது.

இந்திய தங்க நகை வியாபாரிகள் சங்க மாநில செயலாளர் சாந்தக்குமார் பேட்டி

இது குறைக்கப்பட்டால் சவரனுக்கு 6 ஆயிரம் ரூபாய்வரை விலை குறையும்.விலை உயர்வால் தங்கம் வாங்க முடியாத வாடிக்கையாளர்கள் தங்களது பழைய தங்கத்தை கொடுத்து புதிய தங்க நகைகளை வாங்கலாம். பின் தங்கத்தின் விலை குறைந்ததும் பணம் கொடுத்து தங்க நகை வாங்கலாம்” என்றார்.

இதையும் படிங்க : குடியிருப்புப் பகுதியில் குப்பைகளைக் கொட்ட எதிர்ப்பு - பொதுமக்கள் சாலை மறிய
ல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.