ETV Bharat / state

Gold Rate:தங்கம் வாங்க நல்லநேரம் வந்துட்டு... 2வது நாளாக தங்கம் விலை சரிவு! - சவரனுக்கு 120 ரூபாய் சரிவு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Gold Rate
தங்கம் விலை
author img

By

Published : Aug 3, 2023, 5:50 PM IST

சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை தினமும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. பொதுவாக ஆடி மாதம் என்பதால் எந்த ஒரு விஷேச நிகழ்வுகளும் இருக்காது. அதனால், தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்படும். ஆனால், வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு ஆடி மாதம் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது. இந்த விலை ஏற்றம் தங்கம் வாங்குபவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

மேலும், கடந்த ஜூலை 21ஆம் தேதி தங்கம் விலை திடீரென சரிவைச் சந்தித்தது. ஒரேநாளில் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்தது. அதேபோல், ஜூலை 22ஆம் தேதி 120 ரூபாய் குறைந்தது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் குறைந்தது. பின்னர், ஜூலை 23ஆம் தேதி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 44,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த மாதத்தொடக்கத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. ஆகஸ்ட் 1ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 44,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 44,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட்-3) சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 44,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் தங்கம் ஒரு கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 5,535 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 1.8 ரூபாய் குறைந்து 78.50 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 78,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றும் இன்றும் சேர்த்து தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை.. எவ்வளவு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.