சென்னை: சென்னையில் 22- கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,635-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.45,080-க்கும் விற்பனை ஆகி வருகின்றன. இதேபோல் வெள்ளி ஒரு கிராம் 30 காசுகள் உயர்ந்து ரூ.78-க்கும், ஒரு கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிலோ ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையானது சர்வதேச பொருளாதாரச் சூழலின் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி, சர்வதேச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்க வங்கிகளின் வட்டி விகிதம் என பல்வேறு காரணங்களை முன்வைத்துதான் தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.
மேலும், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே உருவாகியுள்ள போரின் எதிரொலியாக கடந்த ஒரு மாத காலமாக தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டது. தற்போது சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தால் உள்நாட்டு பொருளாதாரச் சந்தையிலும் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது. அதன்படி, கடந்த இரண்டு நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.440 வரை அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம் (நவ-16):
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,610
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.45,080
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,105
- 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.48,840
- 1 கிராம் வெள்ளி - ரூ.78
- 1 கிலோ வெள்ளி - ரூ.78,000
இதையும் படிங்க: விளக்கம் கேட்டு மசோதாக்களைத் திருப்பி அனுப்பிய ஆளுநர்..! சிறப்புச் சட்டமன்றத்தைக் கூட்டத் தமிழக அரசுத் திட்டம்!