சென்னை: தங்கம் விலை தொடர்ந்து இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.45,160 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரின் எதிரொலியாக, உலகம் முழுவதும் தங்கத்தின் முதலீடு மற்றும் அதன் விலையில் தொடர் ஏற்றம் இறக்கம் இருந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று இன்று ஆகிய இரு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 வரை அதிகரித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,645-க்கு விற்பனையாகிறது. மேலும், தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,160-க்கு விற்பனை ஆகிறது.
இதேபோல் வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.1.70 அதிகரித்து ரூ.77.70-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,700- அதிகரித்து ரூ.77,770-க்கு விற்பனையாகி வருகிறது. நேற்று மற்றும் இன்று ஆகிய இரு நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.440 வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (நவ.15) நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை:
- 1 கிராம் தங்கம் (22கேரட்) - ரூ.5,645
- 1 சவரன் தங்கம் (22கேரட்) - ரூ.45,160
- 1 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.6,115
- 8 கிராம் தங்கம் (24-கேரட்) - ரூ.48,920
- 1 கிராம் வெள்ளி - ரூ.77.70
- 1 கிலோ வெள்ளி - ரூ.77,700