சென்னை: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரின் தாக்கத்தால் கடந்த மாதம் தங்கத்தின் விலை விண்ணை தொட்ட நிலையில், கடந்த 4 நாட்களாக விலை குறைந்து வருகிறது. சர்வதேச பொருளாதர சுழலின் மத்தியில், கமாடிட்டி மார்க்கெட்டைப் பொருத்து தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யபட்டு வருகிறது.
இது மட்டுமின்றி சர்வேதச வங்கி, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்க வங்கிகளின் வட்டி விகிதம் என்று பல்வேறு காரணங்களை முன் வைத்து, தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கம் காணப்படும். இந்நிலையில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வரும் போரின் எதிரோலியாக, கடந்த 1 மாத காலமாக தங்கத்தின் விலையில் தினமும் ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வந்தது.
இந்த சூழலில், இன்று (நவ.9) காலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. அதன் எதிரொலியாக உள்நாட்டு தங்க பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து சென்னையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5,615 க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.44,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் குறைந்து ரூ.76.20க்கும், ஒரு கிலோவிற்கு ரூ.300 குறைந்து ஒரு கிலோ கட்டி வெள்ளி கிலோ ரூ.76,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
4 நாட்களில் 800 ரூபாய் குறைவு: கடந்த மாதம் தங்கத்தின் விலை உச்சம் அடைந்து வந்த நிலையில், தற்போது சரிய தொடங்கியுள்ளது. இன்றுடன் சேர்த்து 4 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 வரை குறைந்துள்ளது. அதன்படி திங்கட்கிழமை தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாயும், செவ்வாய்க்கிழமை 240 ரூபாயும், புதன்கிழமை 80 ரூபாயும், இன்று சவரனுக்கு 360 ரூபாயும் குறைந்துள்ளது.
இன்றைய (நவ.9) தங்க விலை நிலவரம்:
- 1கிராம் தங்கம்(22கேரட்) ரூ.5,615
- 1சவரன் தங்கம்(22கேரட்) ரூ.44,920
- 1கிராம் தங்கம் (24-கேரட்) ரூ 6,085
- 8 கிராம் தங்கம் (24-கேரட்) ரூ48,680
- 1கிராம் வெள்ளி -ரூ.76.20
- 1-கிலோ வெள்ளி - ரூ.76,200
மேலும், தங்கத்தின் விலை அதிகரிப்பால், உள்நாட்டு சந்தையில் தங்கத்தை யாரும் வாங்கவில்லை. இதனால் விலை குறைந்திருக்கும் என்று நகை கடை உரிமையாளர்கள் வட்டாரம் தரப்பில் கூறப்படுகிறது.