ETV Bharat / state

குடும்பத்துடன் சுற்றுலா...ஐ.டி ஊழியர் வீட்டில் கொள்ளை... - theft in IT Staff House

நங்கநல்லூரில் குடும்பத்துடன் சுற்றுலா சென்று திரும்பிய ஐ.டி. ஊழியர் வீட்டில் 34 சவரன் நகை கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை
சென்னை
author img

By

Published : Nov 14, 2022, 7:28 AM IST

சென்னை: நங்கநல்லூரை சேர்ந்தவர் கணேஷ். லட்சுமி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 10 ஆம் தேதி குடும்பத்துடன் தஞ்சாவூருக்கு சென்று உள்ளார். நேற்று விடு திரும்பிய நிலையில், கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ந்துள்ளார்.

வீட்டினுள் சென்று பார்த்தவருக்கு மேலும் அதிர்ச்சியாக பீரோல் உடைக்கப்பட்டு அதில் இருந்த 34 சவரன் நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இது தொடர்பாக பழவந்தாங்கல் போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கைரேகை நிபுணர்களை கொண்டு ஆதாரங்களை சேகரித்தனர். மேலும் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த 20 ஆண்டுகளாக நங்கநல்லூர் லட்சுமி நகரில் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில், அடுத்தடுத்து இரு சம்பவங்கள் அரங்கேறி இருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படிங்க: எனது சந்திப்பால் முதலமைச்சருக்கு சிக்கல் வருமோ என்ற அச்சம் உள்ளது - நளினி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.