சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் பயணிகளை சோதனை செய்தனர். அப்போது துபாயிலிருந்து வந்த விமானப் பயணிகள் இருவரிடம் ரூ.41.5 லட்சம் மதிப்புள்ள 799 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில், தங்கத்தை கடத்திவந்தவர்கள் புதுக்கோட்டையை சோ்ந்த சேக் அப்துல்லா (25), ராமநாதபுரத்தை சோ்ந்த முகமது ரிப்பாஸ் (36) என்பது தெரியவந்தது.
சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானப் பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், சென்னையை சோ்ந்த நாகூா் மீரான் (54) என்பவரிடம் இருந்து ரூ.7.35 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க.. ரூ.2 கோடி மதிப்புள்ள 3.7 கிலோ தங்கம் - மூவரைக் கைது செய்து விசாரிக்கும் சுங்கத்துறை!