ETV Bharat / state

'பாஜகவின் சூழ்ச்சிக்கு தமிழ்நாடு பலியாகக் கூடாது'

கோதாவரி-காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் என்கிற அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது எனப் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

பாஜகவின் சூழ்ச்சிக்கு தமிழ்நாடு பலியாகக்கூடாது

author img

By

Published : Jun 26, 2021, 1:38 PM IST

சென்னை: கோதாவரி-காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் என்கிற அறிவிப்பை கடந்த ஆட்சியில் ஒன்றிய அரசு அறிவித்தபோது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றார். நதிகளை இணைக்கிற அறிவிப்பு காவிரியில் நமக்கான உரிமையை மறுக்க செய்வதற்கான வேலை என பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகள் முன்பே எச்சரித்திருந்தன.

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் தனது ட்விட்டரில், "பாஜகவின் சூழ்ச்சிக்குத் தமிழ்நாடு பலியாகக் கூடாது. தமிழ்நாடு அரசு கோதாவரி-காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் என்கிற அறிவிப்பை ஏற்றுக்கொள்ளக் கூடாது.

கடந்த ஆட்சியில் இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தபோது ஓடிச்சென்று வரவேற்றார் அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. நதிகளை இணைக்கிற அறிவிப்பே காவிரியில் நமக்கு உள்ள உரிமையை மறுக்க செய்வதற்கான வேலை என அப்போதே பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகள் எச்சரித்திருந்தோம். கடந்த வாரத்தில் மேகேதாட்டு அணை தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த நாடகத்தைப் பார்த்தால் இதைப் புரிந்துகொள்ளலாம்.

அணை கட்ட 60 ஆண்டுகளாக முயற்சி

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக முயற்சி செய்துவருகிறது. கடந்த காலங்களில் பல்வேறு காலகட்டங்களில் கர்நாடக அரசு முயற்சித்தும் தமிழ்நாடு அரசின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது.

1996 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது, மேகேதாட்டுவில் இரண்டு நீர்மின் திட்டங்களை ஓகேனக்கலிலும் தேசிய நீர்மின் கழகம் அமைக்கும் என்கிற திட்டத்தை முன்வைத்தது.

தமிழ்நாடும் கர்நாடகாவுக்கு இதுகுறித்து பலசுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தின. ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கர்நாடக அரசு தாங்களாகவே மேகேதாட்டுத் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்துபோது அந்த பேச்சுவார்த்தையிலிருந்து தமிழ்நாடு விலகிக்கொண்டது.

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் டீவிட்
பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் டீவிட்

எதிர்ப்பை சமாளிக்க புதிய திட்டம்

ஆனால் ஒன்றியத்தில் பாஜக வந்தபிறகு அணை கட்டுவதற்கான முயற்சிகள் வேகம்பிடிக்க ஆரம்பித்தது. காவிரி நடுவர் ஆணைய உத்தரவை அமல்படுத்த உச்சநீதிமன்றம் தெரிவித்து அரசிதழில் வெளியான பிறகு, கர்நாடகாவிலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அணை கட்டுவதற்கான வேகம் அதிகரித்துள்ளது.

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டில் எழும் எதிர்ப்பை சமாளிக்க ஒன்றிய அரசு யோசித்து உருவாக்கிய திட்டம்தான் கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டம். மேகேதாட்டுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டிற்கு எந்த பிரச்சினையும் கிடையாது என கர்நாடக அரசு சொல்வது உண்மைக்குப் புறம்பானது.

மேகேதாட்டு அணையை, கிருஷ்ணராஜ சாகர்-கபினி மற்றும் மேட்டூர் அணைகளுக்கு இடையே கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொறியியல் மொழியில் "balancing reservoir"என்று அழைக்கப்படும் மேகேதாட்டு அணை கிருஷ்ணராஜ சாகர்-கபினி நீர்தேக்கங்களிலிருந்து வரும் நீரை தேக்கி குடிநீர், மின்னுற்பத்திக்குப் பயன்படுத்துவதுதான் நோக்கம் என கர்நாடக அரசு சொல்கிறது. தமிழ்நாட்டின் பார்வையில் மேகேதாட்டு அணையின் அடிப்படையே சிக்கல்தான்.

கோதாவரி-காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம்
கோதாவரி-காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம்

ஒன்றிய, கர்நாடக அரசு நடத்தும் சூழ்ச்சி

கிருஷ்ணராஜ சாகர்-கபினி நீர்தேக்கத்திலிருந்து வெளிவரும் "நீர்வழி பாதையில்" 67 டிஎம்சி கொள்ளளவில் மேகேதாட்டு அணை அமைய இருப்பதால் கர்நாடகாவிற்கும் மேட்டூர் அணைக்கும் இடைப்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்காமல் போகும். கடந்த 25 ஆண்டுகளில், குறிப்பாக அக்டோபர், நவம்பர் மாதங்களில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் காவிரி நீர் இந்த இரு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கிடைக்கும் நீர்தான். கர்நாடக அரசு திறந்துவிடும் நீர் கிடையாது.

கிருஷ்ணராஜ சாகர் - மேட்டூர் அணைகளுக்கு இடையே உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து ஓடிவரும் நீரால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கிடைக்கிறது. இதுதான் கர்நாடகாவை உறுத்துகிறது. இதை குறிவைத்துதான் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகம் துடியாய் துடிக்கிறது.

கோதாவரி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு தருவதற்கு நதியின் வடிகால் பகுதியில் உள்ள ஐந்து மாநிலங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும். ஒருவேளை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டாலும் தண்ணீர் வருமா என்பது பெரிய கேள்விதான். இந்தியாவின் எந்த நதியிலும் உபரிநீர் கிடையாது என ஒன்றிய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளதை நாம் நினைவில் கொண்டால் எந்த கோதாவரி தண்ணீரை திருப்புவீர்கள் என கேள்வி கேட்கலாம். ஒன்றிய அரசு, கர்நாடக அரசு நடத்தும் இந்த சூழ்ச்சியை புரிந்துகொண்டு தமிழ்நாடு அரசு செயல்படவேண்டும்" என்று பதிவுசெய்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த 'ஷாக்': இப்போது ஸ்டாலின் குட் புக்கில்...!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.