ETV Bharat / state

வன்னியர் உள்ஒதுக்கீடு: 40 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு கிடைத்த இடைக்கால வெற்றி - ஜி.கே. மணி

சென்னை: வன்னியர் சமுதாயத்திற்கான 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு 40 ஆண்டுகாலப் போராட்டத்திற்கு கிடைத்த இடைக்கால வெற்றி என பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் ஜிகே மணி பேட்டி
பாமக தலைவர் ஜிகே மணி பேட்டி
author img

By

Published : Feb 26, 2021, 10:21 PM IST

சென்னையில் உள்ள பாமக அலுவலகத்தில் அதன் தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ஆளும் அரசு வன்னியர்களுக்காக 10.5 விழுக்காட்டை முதல் கட்ட இட ஒதுக்கீடு என சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், சாதி வாரியான கணக்கெடுப்பிற்குப்பின் 6 மாத காலத்திற்குள், புதிய இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது 40 ஆண்டு கால வன்னியர் உள் ஒதுக்கீடு போராட்டத்திற்கு கிடைத்த இடைக்கால வெற்றி.

இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீடு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் புள்ளி விவரங்களின் அடிப்படையில்தான், இந்த இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருக்கிறது.

இது சமூக நீதிக்கான போராட்டம். ஆனால், சிலர் இதை திட்டமிட்டு திசை திருப்புகின்றனர். 1931ஆம் ஆண்டுக்குப் பிறகு கணக்கெடுப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

அதிமுக - பாமக தொகுதிப் பங்கீடு குறித்து, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நாளை அல்லது நாளை மறுநாள் தெரிவிப்பார்.

பாமக தலைவர் ஜிகே மணி பேட்டி

அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தான் பாமகவின் கோரிக்கையாக இருந்தாலும், பட்டியலின சமூகத்திற்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: அரசுப்பள்ளி கொடிக்கம்பத்தில் பாமக வன்னியர் சங்க கொடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.