சென்னை பூந்தமல்லி வேலப்பன் சாவடி அருகே உள்ள சவிதா பல்கலைக்கழகத்தில் 14ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஜெர்மன் தூதர் காரின் ஸ்டோல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பல்கலைக்கழக அளவில் இடம் பிடித்த 39 மாணவர்கள் உள்பட மொத்தம் 662 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதையடுத்து காரின் ஸ்டோல் பேசுகையில், ஏற்றுமதி தொழிலைச் சார்ந்துள்ள ஜெர்மனி, இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு தொழில் செய்து வருகிறது. ஜெர்மன் நிறுவனங்கள் மருத்துவ துறைசார்ந்த உபகரணங்கள் தயாரிப்பதில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றன.
பொறியியல் துறைக்கு ஜெர்மனி மிகுந்த வரவேற்பு அளிக்கின்றது. இதற்கு அங்குள்ள கார் நிறுவனங்களே எடுத்துக்காட்டு என்றார். இரு நாடுகளும் இயற்கை, சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்க வேண்டும் என எண்ணுகின்றன. மேலும் பருவநிலை மாற்றத்தில் இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவியும், ஒத்துழைப்பும் ஜெர்மனி வழங்கும் என அவர் உறுதியளித்தார்.
இதையும் படிங்க:
பலதரப்பு வர்த்தக கூட்டணியை வலுப்படுத்துவதே எங்களின் நோக்கம்: ஜெர்மனி அதிபர்