ETV Bharat / state

அண்ணாமலை கீழ் செயல்படும் வார் ரூம் மீது நடிகை காயத்ரி ரகுராம் புகார்! - காயத்ரி ரகுராம் செய்தியாளர் சந்திப்பு

சமூக வலைதளத்தில் தனது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து கொச்சையான தகவல்களை பரப்பிய ராணிப்பேட்டை பாஜக பிரமுகர் உட்பட பலர் மீது நடிகை காயத்ரி ரகுராம் புகார் அளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 30, 2023, 11:06 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த காயத்ரி ரகுராம்

பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம், சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்ஃபிங் செய்து பதிவிட்ட ராணிப்பேட்டையைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பாபு மீது ஆன்லைன் மூலமாக சைபர் கிரைமில் புகார் அளித்திருந்தார். இன்று அந்த புகார் குறித்து விரிவான விளக்கம் அளிப்பதற்காக காயத்ரி ரகுராம் காவல் ஆணையர் அலுவலகம் வந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த காயத்ரி ரகுராம், “சமூக வலைதளத்தில் என்னுடைய புகைப்படத்தை மார்ஃபிங் செய்து கொச்சையாக வெளியிட்டவர்கள் மீது புகார் அளித்துள்ளேன். ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மாவட்ட துணை தலைவர் பாபு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் மீது புகார் அளித்துள்ளேன்.

பாஜகவில் எனக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறிதான் நான் வெளியே வந்தேன். மேலும், அந்த கட்சியில் இருக்கக்கூடிய பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. கடந்த மூன்று மாத காலமாக என்னைப் பற்றி சமூக வலைதளத்தில் அண்ணாமலை அவர்களின் வார் ரூம் இல்லாதது பொல்லாததையும் கூறி வருகின்றனர். ஆடியோ வீடியோ வெளியானது.

வார் ரூம் என்பது ஒவ்வொருத்தருக்காக ஒரு தனி ஐடி விங்கை வைத்துக் கொண்டு, அதில் நான்கு பேரை வைத்துக் கொண்டு, பல ஃபேக் ஐடிகளை உருவாக்கி, அவர்களை எதிர்ப்பவர்களை பற்றி கொச்சையான தகவலை பரப்புவது தான் வார் ரூம்களின் வேலை. என்னைப் பற்றி சமூக வலைதளத்தில் இவ்வளவு கொச்சையாக பதிவிடுகிறார்கள் என்றால் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் இதுபோன்று துணிவான செயலில் ஈடுபட முடியாது.

அண்ணாமலையின் வார் ரூம் தான் இதுபோன்று என்னைப்பற்றியும் என்னுடைய புகைப்படத்தை மார்பிங் செய்தும் கொச்சையான பதிவுகளையிட்டு பரப்பி வருகின்றனர். அண்ணாமலையின் புகைப்படத்தை தங்களுடைய டிபியாக வைத்துக்கொண்டு இதுபோன்ற கொச்சையான தகவல்களை அவருடைய வார் ரூம்கள் பரப்பி வருகின்றனர்.

நான் தனிப்பட்ட நபர் பலவீனமாக இருப்பவர் என்ற நம்பிக்கையில் என்னை பற்றி அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். உயிரே போனாலும் பரவாயில்லை நான் பயப்படவில்லை அச்சத்தோடு எதற்கு வாழ வேண்டும். தமிழக பாஜகவில் பெண்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாலியல் அச்சுறுத்தலும் இருக்கும்” எனவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: தெலங்கானா பட்ஜெட் விவகாரம் : ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் கேசிஆர் இடையே உடன்பாடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.