சென்னை மாநகராட்சிக்குள்பட்ட ஒன்பதாவது மண்டலம் அருகே முல்லைநகரில் உள்ள இந்து மயான பூமியில் எரிவாயுவில் பழுது ஏற்பட்டுள்ளதால், அதனை சரி செய்யும் பணியில் மாநகராட்சி பொது சுகாதாரத் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் டிசம்பர் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை முல்லைநகர் மயான பூமி செயல்படாது. தற்போது பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் மூன்று நாள்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் கொடுங்கையூர், சீத்தாராம் நகர், தண்டையார்பேட்டை, காசிமேடு, ராயபுரம் இந்து மயான இடத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருமணமும் குழந்தையும் பெண்ணின் லட்சியத்துக்கு தடையில்லை! - சாதித்துக்காட்டிய மருத்துவர்!