ETV Bharat / state

‘காந்தியின் கொள்கைதான் காங்கிரசின் பலம்’ - கே.எஸ். அழகிரி பெருமிதம்!

சென்னை: காங்கிரஸ் கட்சி இப்போது வரை பலமாக இருப்பதற்கு காரணம் அதன் கொள்கைகள்தான் என்று அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Oct 2, 2019, 1:18 PM IST

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

அண்ணல் காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுதந்திர தின பாடல்கள், மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் அரிய புகைப்படங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சியும் நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி, காந்தியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தோடு கலந்துகொண்டனர். அப்போது பேசிய கே.எஸ். அழகிரி, “காங்கிரஸ் நாள்காட்டியில் இந்த நாளை விட மிக முக்கியமான நாள் ஒன்று இருக்க முடியாது. காந்தியை நினைவுகூறும் வகையில் உயரமான கொடிக்கம்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி தோன்றியதிலிருந்து, காப்பாற்றப்பட்டு வருவதற்கு அதன் கொள்கைகளே காரணம். நாடு தவறானவர்களின் கைகளில் போய்விட்டது. அதற்கான காரணம் நாம் உழைக்காமல் விட்டதுதான். காந்தி, காமராஜரை விட சாதனையாளர்கள் இந்திய நாட்டில் எவரும் இல்லை” என்று கூறினார்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 02.10.19

காங்கிரஸ் இப்போது வரை பலமாக இருக்கக் காரணம் அதன் கொள்கையே... தவறானவர்களிடம் ஆட்சி போனதற்கு காரணம் நாம் உழைக்காதது தான்: கே.எஸ்.அழகிரி பேச்சு..

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை சத்திய மூர்த்தி பவனில், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்யப்பட்டிருந்தது.. நாதஸ்வர கெட்டி மேளத்தில் சுதந்திர தின பாடல்கள், மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறை கூறும் அரிய புகைப்படங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காந்தியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அரங்கில் சிறப்புரை நிகழ்த்தி மகாத்மா காந்தி பற்றி பேசினார்.. காந்தியின் பிறந்தநாள் விழாவை தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் முழுமையாக கொடிகள் தோரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அலுவலகத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர்.. அனைவரும் உற்சாகத்தோடு இவ்விழாவினை கொண்டாடினர்.

நிகழ்ச்சியில் பேசிய கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் நாள்காட்டியில் இந்த நாளை விட மிக முக்கியமான நாள் இருக்க முடியாது. காந்தியை நினைவுகூறும் வகையில் உயரமான கொடிக்கம்பம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தோன்றியதிலிருந்து அது காப்பாற்றப்பட்டு வருவதற்கு அதன் கொள்கைகளே காரணம். காந்தி கூறிய தீர்மானம் கூட ஏற்றுக்கொள்ளப்படாமல் தவிர்க்கப்பட்டும் கட்சி உடையவில்லை.. நாடு தவறானவர்களின் கைகளில் போய்விட்டது.. அதற்கான காரணம் நாம் உழைக்காமல் விட்டது தான். மகாத்மாவை விட காமராஜரை விட சாதனையாளர்கள் இந்திய நாட்டில் இல்லை. காமராஜரின் ஏழ்மை அறியாமை உலகரியும்.. இரண்டு பிரதமர்களை தேர்தெடுக்கும் உரிமையை பெற்றவர் காமராஜர். எந்த பின்னடைவு வந்த போதும் அவர் கட்சி மாறியதில்லை என்பது தான். இப்போது உள்ள நிலையும் மாறும் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என்றார்..

tn_che_02_Ganthi_jeyanthi_function_Congress_office_gallery_script_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.