சென்னை பெரும்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியிலிருந்து பல இடங்களுக்கு கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கஞ்சா விற்பனை செய்த வீர மருது (வயது 28) என்பவரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை செய்தனர். அப்போது பெரும்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் உள்ள சுபாஷ் (27) மற்றும் சந்தோஷ் (27) ஆகியோர் கஞ்சா விற்பதாகக் கூறிய தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் விரைந்து இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் வைத்திருந்த 1.8 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 7 கத்திகளை பறிமுதல் செய்தனர். மேலும் கைதான இருவர் கொடுத்த தகவலின் பேரில் அதே பகுதியில் வசிக்கும் பார்வதியை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 11 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் இவர்களிடம் நடத்திய விசாரணையில் கண்ணகி நகரைச் சேர்ந்த செங்கா என்பவர் தான், இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதாக கூறியுள்ளனர். இதனால் செம்மேஞ்சேரி காவல் துறையினர் அந்த நபரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிக்க: 40 வருடங்களுக்கு பின் நிரம்பிய தெப்பக்குளம்.... ஆனந்தமும் ஆதங்கமும்