ETV Bharat / state

"ஓட்டுக்கு காசு வேணாம்! அப்பா, அம்மா கிட்ட சொல்லுங்க" - அரசியல் அட்வைஸ் சொன்ன விஜய் - Full speech of vijay i

10 மற்றும் 12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் இன்று சான்றிதழ்களை வழங்கினார். வாக்குக்கு பணம் வாங்குவது குறித்து மாணவர்களுக்கு அட்வைஸ் சொன்ன விஜய், தங்கள் தாய் தந்தையரிடம் இதனை வலியுறுத்துமாறு கூறினார்.

நாளைய வாக்காளர்களே புதிய தலைவர்கள் வருகிறார்கள் - நடிகர் விஜய் பேச்சு

author img

By

Published : Jun 17, 2023, 12:12 PM IST

Updated : Jun 17, 2023, 7:42 PM IST

விஜய் கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசிய முழு வீடியோ

சென்னை: கடந்த 2022 - 2023ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் இன்று (ஜூன் 17) சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத் தொகையினை வழங்கினார். முன்னதாக விழா மேடையில் ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என விஜய் தனது பேச்சைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய விஜய், “நிறைய இசை வெளியீட்டு விழா மேடைகளில் நான் பேசி இருக்கிறேன். ஆனால், இந்த மாதிரியான மேடைகளில் நான் பேசியதில்லை. ஏதோ, மனதில் புதிய பொறுப்புணர்ச்சி வந்ததுபோல் இருக்கிறது.

வருங்கால இந்தியாவின் இளம் நட்சத்திரங்களாகிய உங்களை (மாணவர்கள்) சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. ‘உன்னில் என்னை காண்கிறேன்’ என்பதைபோல, எனக்கு என்னுடைய பள்ளிப் பருவ காலங்கள்தான் வந்து செல்கிறது. நான் ஒரு ஜஸ்ட் பாஸ் மாணவன் மட்டுமே. என்னுடைய கனவு சினிமாதான்.

சமீபத்தில் நான் ஒரு படத்தில் சில வசனங்களைக் கேட்டேன். அதில், காடு இருந்தால் எடுத்துக் கொள்வார்கள். ரூபாய் இருந்தால் பிடுங்கிக் கொள்வார்கள். ஆனால், படிப்பை மட்டும் யாராலும் எடுத்துக் கொள்ள முடியாது” என அசுரன் படத்தில் இடம் பெற்றிருந்த வசனத்தைக் கூறினார்.

இதனையடுத்து பேசிய அவர், “முழுமையான கல்வி என்பது நாம் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று கற்றுக் கொண்டதை மறந்த பிறகு எது எஞ்சி இருக்கிறதோ, அதுதான் கல்வி. நீங்கள் கற்றதில் இருந்து எஞ்சி இருப்பது என்பது உங்களுடைய குணம் மற்றும் உங்களின் சிந்திக்கும் திறன். When Wealth is lost, nothing is lost, When health is lost, something is lost, When character is lost, everything is lost" என குணத்தின் முக்கியத்துவத்தை கூறினார்.

மேலும் பேசிய விஜய், “நீங்கள் தற்போது பெற்றோரை விட்டு உயர் கல்விக்குச் செல்லும் இடத்தில் கிடைக்கும் சுதந்திரத்தை சுய ஒழுக்கத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள். தற்போது தகவல் காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் இருப்பதில் எதை எடுக்க வேண்டும், எதை எடுக்கக் கூடாது என்பதை நீங்கள்தான் ஆராய வேண்டும். உங்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி படிக்க வேண்டும்.

அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராஜர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள்தான் (மாணவர்கள்) நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க உள்ளீர்கள். பணம் வாங்கிவிட்டு வாக்களிப்பது என்பது, நமது கண்களை நாமே குத்திக் கொள்வது போன்றுதான். ஒருவர் ஒரு வாக்குக்காக ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம்.

ஒரு தொகுதிக்கு 15 கோடி ரூபாய் செலவழித்தால், அந்த அரசியல்வாதி அதற்கு முன்னாள் எவ்வளவு சம்பாதித்திருக்க வேண்டும்? தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தங்களது பெற்றோரிடத்தில், இனி பணம் வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்காதீர்கள் என கூறிப் பாருங்கள். நீங்கள் சொன்னால் அது நிச்சயமாக நடைபெறும்.

ஏனென்றால், நீங்கள்தான் அடுத்த முதல் தலைமுறை வாக்காளர்கள். இந்த பொதுத் தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் உடன் பேசி, அவர்களுக்கு ஊக்கம் அளித்து வெற்றி அடையச் செய்யுங்கள். எந்த சூழ்நிலையிலும் தவறான முடிவுகளை மாணவர்கள் எடுக்க வேண்டாம். வளர்ப்போம் கல்வி” எனக் கூறினார்.

இதையும் படிங்க: நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான விருது! என்ன படம் தெரியுமா?

Last Updated : Jun 17, 2023, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.