ETV Bharat / state

முன்பகை காரணமாக நண்பர் மீது தாக்குதல்; சிசிடிவி காட்சி வெளியீடு - chennai district news

சென்னை: முன்பகை காரணமாக நண்பரை ஹெல்மெட்டால் தாக்கிய நபரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்பகை காரணமாக நண்பரை ஹெல்மட்டால் தாக்கிய நண்பர்

author img

By

Published : Oct 13, 2020, 3:25 PM IST

சென்னை தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில் உள்ள குபேர் மோட்டார்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் இசக்கியப்பன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மனைவிக்கும் இடையே சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் முன்விரோதம் காரணமாக நண்பர் சக்திவேல் இசக்கியப்பன் குறித்து அவரது மனைவியிடம் தவறாக கூறிவந்துள்ளார். இது தெரியாமல் அப்பெண் தன்னை தவறாக பேசுவதாக காவல் நிலையத்தில் இசக்கியப்பன் மீது புகார் அளித்துள்ளார்.

முன்பகை காரணமாக நண்பரை ஹெல்மெட்டால் தாக்கிய நண்பர்

பின்னர் காவல் துறையினர் இசக்கியப்பனை அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். மீண்டும் அலுவலகத்திற்கு வந்த பிறகு இதுகுறித்து கேட்ட இசக்கியப்பனை, அவரது நண்பர் சக்திவேல் அப்படிதான் செய்வேன் எனக்கூறி தலையில் ஹெல்மெட்டால் பயங்கரமாக தாக்கியுள்ளார்.

இந்தக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. உடனே சக ஊழியர்கள் இசக்கியப்பனை அழைத்துக் கொண்டு சிகிச்சைக்கு தனியார் மருத்தவமனையில் அனுமதித்தனர்.

மேலும் காவல் துறையினர் சக்திவேலிடம் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: போதைப்பொருள் விவகாரம்: நடிகை ராகினியின் தோழர் சிறையிலடைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.