ETV Bharat / state

பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டர் வழங்கக்கூடாது... சென்னை உயர் நீதிமன்றம் - Madras high Court

டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டர் நடைமுறையைத் தொடரலாம் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை டெண்டர் வழங்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டர் வழங்க கூடாது

author img

By

Published : Aug 18, 2022, 10:21 PM IST

சென்னை: டாஸ்மாக் மதுபானக்கடை அருகில் தின்பன்டங்களை விற்பனை செய்வது மற்றும் காலிப்பாட்டில்களை சேகரிப்பது, பார்களை நடத்துவதற்கான உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.

தற்போது பார் உரிமம் பெற்றவர்கள் பார் நடத்தும் இடத்தை டெண்டரில் வெற்றி பெற்றவருக்கு வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிறுவனம் வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆகஸ்ட் 2ஆம் தேதி அறிவிப்பாணைக்குத் தடை கோரி திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பார் உரிமைதாரர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுக்களில், ஏற்கெனவே பார் உரிமம் பெற்றுள்ள தனக்கும், டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் இடையில் அந்த இடத்திற்காக குத்தகை ஒப்பந்தம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், நில உரிமையாளருடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், அந்த இடத்தை மூன்றாம் நபருக்கு வழங்க தங்களை நிர்ப்பந்திக்க முடியாது என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய பார் உரிமையாளர்களின் உரிமையைப் பாதுகாக்காமல் வெளியிடப்பட்டுள்ள டெண்டருக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் டெண்டரை ரத்து செய்து உரிமத்தை நீடித்துத் தர உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், டெண்டர் நடைமுறையைத் தொடரலாம் என்றும் இந்த வழக்கு குறித்து நீமன்றம் தீர்ப்பு வரும்வரை டெண்டர் வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், மனுவுக்கு ஆகஸ்ட் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஒரு கொடூரமான செயல்... 17 போலீசார் மீது நடவடிக்கைவேண்டும்... நீதிபதி அருணா ஜெகதீசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.