ETV Bharat / state

14 வது ஊதிய ஒப்பந்தம்.. ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை இழுபறி.. தொடரும் பேச்சுவார்த்தை - tn transport employees

ஊதிய ஒப்பந்த காலத்தை நான்கு ஆண்டுகளாக அதிகரிக்கும் முடிவிற்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாலும் , ஓய்வுபெற்றோர் அகவிலைப்படி உயர்வு குறித்து உடன்பாடு ஏற்படாததாலும் 14 வது ஊதிய ஒப்பந்த ஏழாம் கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துள்ளதால், இரண்டாவது நாளாக இன்றும் பேச்சுவார்த்தை தொடர்கிறது.

14 வது ஊதிய ஒப்பந்தம்.. ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை இழுபறி.. இன்றும் தொடரும் பேச்சுவார்த்தை

author img

By

Published : Aug 24, 2022, 7:39 AM IST

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஆனால் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைந்திருக்க வேண்டிய 14 வது ஊதிய ஒப்பந்தம் தற்போது வரை இறுதி செய்யப்படாமல் உள்ளது.

இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நேற்று (ஆகஸ்ட் 23) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் கோபால், நிதித்துறை இணை செயலாளர் அருண்சுந்தர் தயாளன், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லட்சுமி காந்தன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 67 தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.

வழக்கமாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கலந்துரையாடல் அரங்கத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர், அமைச்சர், துறையின் செயலாளர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தையாக நடைபெறும். ஆனால் நேற்றைய பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க பிரதிநிதிகளை தனித்தனியாக வரவழைத்து, தனி அறையில் அமைச்சர் சந்தித்துள்ளார்.

அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் கமலக்கண்ணன் செய்தியாளர் சந்திப்பு

இறுதியாக கலந்துரையாடல் அரங்கத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனையில் ஈடுபட்டார். இருப்பினும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தை நான்கு ஆண்டுகளாக அதிகரிக்கும் அரசின் முடிவிற்கு தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததாலும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படாததாலும் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டது.

எனவே தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலாளர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கடந்த 16 ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெற்றது.

அந்த உண்ணாவிரத எழுச்சியால் இந்த பேச்சுவார்த்தை நடந்தது. ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் என நினைத்தோம். அமைச்சர் ஏற்கனவே பேசியது இல்லாமல் புதிய பிரச்னைகள் தொடர்பாக மட்டும் தனி அறையில் வந்து பேசுமாறு கூறினார். இந்த பேச்சுவார்த்தையில் வெளிப்படைத்தன்மை இல்லை.

நாளை மீண்டும் வந்து கலந்து கொள்வோம். இன்று பங்கேற்ற 67 தொழிற்சங்கமும் தனித்தனியாக சந்திக்க வேண்டும் என்று கூறினர். நாளை அமைச்சரின் அணுகுமுறையைப் பொறுத்து எங்களது முடிவு அமையும். எங்களது கோரிக்கையை அமைச்சரிடம் வலியுறுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

கூட்டமைப்பில் உள்ள சங்கத்தினர் மட்டும் அமைச்சரை சென்று பார்த்தனர். அனைத்து சங்கங்களும் தனிப்பட்ட கருத்து இருந்தால் தனியாக வந்து கூறுங்கள் என்று அமைச்சர் கூறியதை நாங்கள் ஏற்கவில்லை. விவாதமே இல்லாமல் அமைச்சருடன் தனியாக சென்று பேச எங்களுக்கு விருப்பமில்லை. அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து நாளை அறிவிப்போம்" என கூறினார்.

இதையும் படிங்க: தொழிற்சங்கங்கள் முன்வைத்த 99% கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது - தொ.மு.ச சண்முகம் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.