சென்னை: மதுரவாயல், பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மகன் ரக்ஷன் (4). ரக்ஷனுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து, சிறுவனது பெற்றோர், ரக்ஷனை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு, சிறுவனை பரிசோதித்ததில் அவனுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, சிறுவனை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக செப்டம்பர் 6 ஆம் தேதி அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் நேற்று இரவு (செப்.09) உயிரிழந்தார். மேலும், மதுரவாயல் பகுதியில் நிலவும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் டெங்கு காய்ச்சல் பரவுகிறது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள், அந்தப் பகுதியில் விழிப்புணர்வு நோட்டீஸ்களை ஒட்டிச் சென்றனர்.
இதையும் படிங்க: பெண்ணிடம் கத்தி முனையில் கொள்ளை.. இருசக்கர வாகன திருட்டு..