ETV Bharat / state

670 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: காரில் கடத்திய 4 பேர் கைது - shankar nagar police arrested 4 persons for Gutka tobacco products

தாம்பரம் மாநகரம் முழுவதும் புகையிலை, போதைப்பொருள்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தாம்பரம் காவல் ஆணையர் ரவி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். நான்கு பேர் மீதும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

670 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்: காரில் கடத்திய 4 பேர் கைது

author img

By

Published : Feb 14, 2022, 2:24 PM IST

சென்னை: காவல் ஆணையரகம் பிரிக்கப்பட்டு, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களாகச் செயல்பட்டுவருகின்றன. தாம்பரம் காவல் ஆணையராக ரவி பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு புகார் கொடுக்கவரும் பொதுமக்களை அலைக்கழிக்க வைத்தால் கூண்டோடு காலிபண்ணிடுவேன் எனத் தாம்பரம் காவல் ஆணையர் ரவி, வாக்கி டாக்கி மூலம் காவல் துறையினருக்கு எச்சரிக்கைவிடுத்தார்.

இதனிடையே, தாம்பரம் மாநகரம் முழுவதும் புகையிலை, போதைப் பொருள்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தாம்பரம் காவல் ஆணையர் ரவி உத்தரவிட்டிருந்தார். அதன்படி காவல் துறையினர் கடைகள், வாகன சோதனையில் ஈடுபட்டு புகையிலைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீது கைது நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

670 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்: காரில் கடத்திய 4 பேர் கைது
670 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: காரில் கடத்திய 4 பேர் கைது

இந்த நிலையில் சங்கர் நகர் காவல் துறையினர் தனிப்படை அமைக்கப்பட்டு சங்கர் நகர் காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாகச் சோதனை செய்துவந்தனர்.

இதனிடையே, நேற்று (பிப்ரவரி 13) அனகாபுத்தூர், காமராஜபுரம் சர்வீஸ் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது காரில் வெள்ளை நிற நெகிழிப் பைகளில் பான் மசாலா, குட்கா, புகையிலைப் பொருள்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யக் கொண்டுசெல்வது தெரியவந்தது.

இதையடுத்து காரில் வந்த காட்டாமல் பகுதியைச் சேர்ந்த சாகுல் அமீது (38), மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபு ராஜ் (32), அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில் வேல் (45), பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த செல்வம் (44) ஆகியோர் கைதுசெய்து அவர்களிடமிருந்து இரண்டு லட்சத்து 23 ஆயிரம் மதிப்புள்ள 670 கிலோ குட்கா புகையிலைப் பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

இதனையடுத்து, நான்கு பேர் மீதும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்புணர்வு - இளைஞர் கைது!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.