சென்னையிலிருந்து ஆஸ்திரேலியா செல்லவிருந்த தனியாா் சரக்கு விமானம் கடந்த சனிகிழமை (அக்.10) இரவு புறப்பட தயாரானது.
அதில் அனுப்ப வந்த பார்சல்களை தனியார் விமான நிறுவன பாதுகாப்பு அலுவலர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது தேனி மாவட்டத்திலிருந்து சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு பார்சலை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அதில் மஞ்சள், மிளகாய் மசாலா பாக்கெட்டுக்குள் வெள்ளை நிற பவுடர் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
பின்னர் அதனை ஆய்வு செய்த போது அது, சூடோபெட்டிரீன் வகையைச் சார்ந்த ஹெராயின் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 கிலோ அளவிலான போதைப் பொருளை சுங்கத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். இதன் சர்வதேச மதிப்பானது சுமார் ரூ.30 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இதுதொடர்பாக புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆண்டனி (41), சென்னையைச் சேர்ந்த சாதிக்(37), பெங்களூருவைச் சேர்ந்த கான்(30), தேனியைச் சேர்ந்த செல்வம்(35) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:நாகை அருகே சாராயம் கடத்தல்: மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!