ETV Bharat / state

பிரபல நகைகடையில் 5 கிலோ தங்கம் திருட்டு: 4 பேருக்கு சிறை! - நகை திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

சென்னை: பிரபல நகைகடையில் 5 கிலோ தங்கத்தை திருடிச் சென்ற ஊழியரை காவல் துறையினர் தேடி வரும் நிலையில் அவரது கூட்டாளிகள் நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிரபல நகைகடையில் 5 கிலோ தங்கம் திருட்டு
பிரபல நகைகடையில் 5 கிலோ தங்கம் திருட்டு
author img

By

Published : Feb 5, 2021, 3:51 PM IST

சென்னை தேனாம்பேட்டை அபிபுல்லா சாலையில் பிரபல நகைக்கடையின் கார்ப்பரேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வந்த பிரவீன் சிங் என்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஜன.23ஆம் தேதி நகைகளை வைக்கும் இரும்பு பெட்டகத்திலிருந்து 5 கிலோ தங்க நகைகளை திருடிச் சென்றதாக அந்நிறுவனத்தின் மேலாளர் முருகன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தனிப்படை காவல் துறையினர் ராஜஸ்தான் மாநிலத்தில் முகாமிட்டு முக்கிய குற்றவாளியான பிரவீன் சிங்கை தேடி வருகின்றனர். அவர் குறித்த எந்தவித தகவலும் தெரியாமல் வழக்கில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் செல்போன் சிக்னலை ஆய்வு செய்த போதும் துப்பு கிடைக்கவில்லை.

இதனால் பிரவீன் சிங்குடன் யார் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என ஆய்வு செய்த காவல்துறையினருக்கு சவுகார்பேட்டையில் செல்போன் கடை, பியூட்டி பார்லர், நகை உருக்கும் கடை உள்ளிட்ட கடைகளில் பணியாற்றும் நான்கு பேர் பிரவீன் சிங்குடன் தொடர்பிலிருந்தது தெரியவந்தது.

அவர்களைப் பிடித்து விசாரணை செய்தபோது, பிரவீன் கொள்ளையடித்த நகைகளை ராஜஸ்தானுக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பாக குறைந்த விலையில் 450 கிராம் தங்க நகையை இந்த நான்கு பேரிடம் விற்று, அதற்கான பணத்தை பெற்றுக் கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. குறைந்த விலையில் கிடைத்த நகை குறித்து காவல் துறையினரிடம் தெரிவிக்காமல் அவற்றை உருக்கி அதிக விலைக்கு விற்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து சவுகார்பேட்டை பகுதியில் கடை வைத்திருந்த விக்ரம் (26), பிந்து மண்டல் (40), சவுதம் மன்னா (33), புபாய் மண்டல் (38) ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்த 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நகைகளைத் திருடிச் சென்ற முக்கிய குற்றவாளியான பிரவீன் சிங்கை தனிப்படை காவல் துறையினர் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோயில் உண்டியல் கொள்ளை: சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வரும் போலிஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.