ETV Bharat / state

சென்னையில் நான்கு சதவீதமாக குறைந்த கரோனா பாதிப்பு! - chennai district news

சென்னையில் கரோனா பரவல் 4 சதவிகிதமாக ஆக குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Four percent lower corona exposure in Chennai

author img

By

Published : Jun 11, 2021, 1:26 PM IST

சென்னை: சென்னையில் அண்ணா நகர், அடையாறு கோடம்பாக்கம் போன்ற சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப்பரவல் சற்று அதிகமாக காணப்படுகிறது. அண்ணா நகரில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 146 ஆகவும், அடையாறு மண்டலத்தில் ஆயிரத்து 134 நபர்களும், கோடம்பாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 115 நபர்களும் கரோனா தொற்றிற்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மண்டலங்களில் கூடுதல் மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாள்தோறும் சராரியாக 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று (ஜூன்.10) சென்னையில் 31 ஆயிரத்து 125 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஆயிரத்து 223 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னையில் கரோனா பரவல் நான்கு சதவிகிதமாக குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி 26.6 சதவீதமாக இருந்த கரோனா பாதிப்பு, மே மாத இறுதியில் 5.9 சதவீதமாகவும், தற்போது குறைந்து நான்கு சதவீதமாகவும் உள்ளது.

சென்னையில் இதுவரை மொத்தம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 52 நபர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 லட்சத்து 2 ஆயிரத்து 184 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 12 ஆயிரத்து 210 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல் சென்னையில் மட்டும் இதுவரை 7ஆயிரத்து 658 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.இதுவரை 21 லட்சத்து 46 ஆயிரத்து 680 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய ரோந்து பணி காவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.