தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டவுடன் முக்கியப் பொறுப்பில் இருந்த பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அலுவலர்கள் பல்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் இன்று (மே.27) நான்கு ஐஏஎஸ் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அலுவலர்களின் பெயர்கள், மாற்றம் செய்யப்பட்ட பதவிகளைக் கீழே காணலாம்.
1.நஜிமுதீன் - கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் செயலாளர்;
2.நிர்மல் ராஜ் - புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர்;
3.வெங்கடேஷ் - கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர்
4.தமிழ்நாடு டாஸ்மாக் மேலாண் இயக்குநராக இருந்த மோகன் மாற்றப்பட்டு, அப்பதவியில் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : தொடரும் பாலியல் தொல்லை: பிரபல பயிற்சியாளர் மீது வீராங்கனை புகார்!