ETV Bharat / state

ஷூ சாக்ஸ், உள்ளாடையில் தங்கம் கடத்தல்.. பெண் உட்பட 4 பேர் கைது! - இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் கைது

சிங்கப்பூர், துபாய், இலங்கை, சார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1.08 கோடி மதிப்பிலான 2.2 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் ஒரு பெண் உட்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அ
a
author img

By

Published : Feb 1, 2023, 6:39 AM IST

Updated : Feb 1, 2023, 3:06 PM IST

சென்னை: சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் வைத்திருந்த கைப்பையை சோதித்த போது, அதனுள் தங்க வளையல்கள், தங்க செயின்கள், மற்றும் தங்க பசை அடங்கிய பார்சல் இருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதோடு அந்த பெண் பயணியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதேபோல், துபாயிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சந்தேகத்தில் பிடித்து விசாரணை நடத்தினர். அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்கப் பசை பார்சலை பறிமுதல் செய்தனர். அந்தப் பயணியையும் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.

இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி சோதனை இட்டனர். அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு பார்சலில் தங்கப் பசை இருந்ததை கண்டுபிடித்து, அவரையும் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

மேலும், சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளைச் சோதித்த போது, அதில் வந்த ஒரு ஆண் பயணி அவர் கால்களில் அணிந்திருந்த ஷூ சாக்ஸ்களில் மறைத்து வைத்திருந்த பார்சல்களில் தங்கப்பசை இருந்ததை கண்டுபிடித்து, அவரையும் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

சென்னை விமான நிலையத்தில், சுங்க அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய சோதனையில், அடுத்தடுத்து 4 விமானங்களில் வந்த, ஒரு பெண் பயணி உட்பட 4 பயணிகளிடம் இருந்து, ரூபாய் ஒரு கோடி 8 லட்சம் மதிப்புடைய 2.2 கிலோ தங்கத்தைச் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து,4 பயணிகளையும் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'தளபதி 67'-ல் இணையும் நட்சத்திர நடிகர்கள்… அடுத்தடுத்து வெளியான அப்டேட்!

Last Updated : Feb 1, 2023, 3:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.