ETV Bharat / state

பெட்சிட் வியாபாரம் செய்வது போல் கஞ்சா கடத்தல் - 4 பேர் கைது - ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தல்

ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி சென்னையில் விற்பனையில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

4 பேர் கைது
4 பேர் கைது
author img

By

Published : Apr 2, 2022, 12:47 PM IST

சென்னை: தாம்பரம் காவல் ஆணையரகம் சரகத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து தாழம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலு தலைமையிலான காவல்துறையினர் நாவலூர் சுங்கச்சாவடி அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியில் அதிவேகமாக நான்கு இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை மடிக்கி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த காவலர்கள் அவர்களை சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

துணிகளின் இடையே கஞ்சா கடத்தி விற்பனை: பின்னர் நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை கே.பிகே.நகரை சேர்ந்த 26 வயதான வெங்கடேசன், துரைப்பாக்கம் பர்மா பஜாரை சேர்ந்த 39 வயதான புன்னியமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகையை சேர்ந்த 21 வயதான சிரில், சென்னை பள்ளிக்காரணை பகுதியை சேர்ந்த 21 வயதான அஜித் என்பது விசாரணையில் தெரியவந்தது.

அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கஞ்சா விற்பனை செய்து வருவதும், போதை மாத்திரைகள் ஊசி மூலம் உடலில் ஏற்றி உச்சகட்ட போதையில் இருந்துவந்ததாகவும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்டவை
பறிமுதல் செய்யப்பட்டவை

மேலும், ஆந்திர மாநிலத்திலிருந்து வலி நிவாரணி மாத்திரைகளான டைட்டால் மாத்திரை மற்றும் நைட்ராவிட் என்ற மாத்திரைகளை கொரியர் மூலம் சென்னை பெருங்குடியில் உள்ள வெங்கடேசன் வீட்டிற்கு வரவைத்து சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் விற்பனை செய்து லாபம் சம்பாதித்து வந்துள்ளனர்.

அதேபோல் ஆந்திர மாநிலம் துணி வில்லேஜ் என்ற பகுதிக்கு சென்னையிலிருந்து பிடிப்பட்ட நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் சென்று பெட்சிட் வியாபாரம் செய்ய எடுத்து வருவதுபோல துணிகளின் இடையே கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்து இங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பறிமுதல் : பின்னர் அவர்களிடம் இருந்து 12.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 45 கிலோ கஞ்சா, 4.5 லட்சம் ரூபாய் மதிப்புடைய 10 சவரன் தங்க நகை, 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய டைட்டால் மாத்திரை 800, நைட்ராவிட் மாத்திரை 600, ஊசி 100 மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான புன்னியமூர்த்தி மீது சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு, பைக் திருட்டு உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வெங்கடேசன் மீது 10க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது. சிரில், அஜித் இருவர் மீதும் நான்கு பைக் திருட்டு மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை மற்றும் பல குற்றச்செயலில் ஈடுபட்டு வந்த நான்கு பேரையும் பிடித்த காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழ்நாடு டிஜிபி அறிவித்த ஆப்ரேஷன் கஞ்சா 2.0யைத் தொடர்ந்து 45 கிலோ கஞ்சா, 1400 போதை மாத்திரைகள், திருடப்பட்ட பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமரன், தாழம்பூர் காவல் ஆய்வாளர் வேலு, உதவி ஆய்வாளர்கள் முத்துகுமார், பார்த்திபன், தலைமை காவலர் சுதர்சன், காசிமுருகன், பிரேம் ஆனந்த் உள்ளிட்ட தாழம்பூர் காவல் நிலைய காவலர்களை தாம்பரம் காவல் ஆணையர் ரவி வெகுவாக பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு: எவ்வளவு அதிகம்...? என்னென்ன மாற்றம்...?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.