ETV Bharat / state

கார்த்திகை தீபத் திருவிழா: சென்னையில் 4 விபத்துகள்! - karthigai deepam in Chennai

திருக்கார்த்திகை தீபத் திருநாளில் சென்னையில் மட்டும் மொத்தம் நான்கு விபத்துகள் பதிவாகி உள்ளது.

கார்த்திகை தீபம்: சென்னையில் 4 விபத்துகள் பதிவு!

author img

By

Published : Dec 7, 2022, 12:47 PM IST

சென்னை: திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபம், நேற்று (டிச.6) கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களிலும், தங்களது வீடுகளிலும் விளக்கேற்றி வழிபட்டனர். அதேபோல் சென்னையிலும் உள்ள பல்வேறு முக்கிய கோயில்களில் பக்தர்களின் வருகை அதிகளவிலிருந்தது. இந்த நிலையில் கார்த்திகை தீபம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, சில விபத்துகளும் நேர்ந்துள்ளன.

விருகம்பாக்கம் ரெட்டி தெருவை பாக்கியலட்சுமி (52), கே.கே நகரில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குச் சென்று தீப விளக்கை ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பாக்கியலட்சுமியின் புடவையில் தீ பற்றி எரிந்துள்ளது. இதனை உணர்ந்த பாக்கியலட்சுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் காயம் அடைந்த பாக்கியலட்சுமி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 40% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக கே.கே. நகர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்(26), தனது வீட்டருகே பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பட்டாசு அவரது கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது ராதாகிருஷ்ணன் எழும்பூர் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக மெரினா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

துரைப்பாக்கம் சீனிவாச நகரில் வசித்து வரும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலாளர் அபூர்வா ஐஏஎஸ்-ன் தாயார் அருணோதயம் (74), வீட்டில் விளக்கேற்றியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது புடவையில் தீப்பற்றியதில் 26 சதவீத தீக்காயத்துடன், கீழ்பாக்கம் அப்பல்லோ மருத்துவமனையில் அருணோதயம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தீ விபத்து தொடர்பாக துரைப்பாக்கம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சைதாப்பேட்டையில் வீட்டில் விளக்கேற்றியபோது தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

இதையும் படிங்க: மது போதையில் கார்த்திகை தீப சொக்கப்பானையில் குதித்த நபர் - பதைபதைக்கும் வீடியோ காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.