ETV Bharat / state

தமிழ்நாடு தேர்தலில் கட்சிகளின் பயணம் - founders of different election parties

பெரியாரின் தளபதியாக அண்ணா இருந்தது போல், அண்ணாவின் தளபதியாக கருணாநிதி இருந்ததுபோல், கருணாநிதியின் தளபதியாக வைகோ இருந்தார். ஆனால், திராவிட இயக்கங்களுக்குள் தலைவருக்கும் தளபதிக்கும் எழும் கருத்து வேறுபாடு கருணாநிதி, வைகோவையும் விட்டுவைக்கவில்லை.

afad
fadf
author img

By

Published : Feb 27, 2021, 5:55 PM IST

Updated : Feb 27, 2021, 7:16 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன. இந்தத் தேர்தலை பொறுத்தவரை ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரண்டு ஆளுமைகள் இல்லாத சூழலில் எடப்பாடி பழனிசாமியும், ஸ்டாலினும் தங்களது ஆளுமையையும், தலைமையையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

எனவே தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களில் இந்தத் தேர்தல் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் உருவான கட்சிகள் மற்றும் அவைகளின் தேர்ந்தல் சந்திப்பு குறித்து அலசுகிறது இக்கட்டுரை

தந்தை பெரியார் (திராவிடர் கழகம்):

நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்பு தந்தை பெரியாரிடம் வந்த பிறகு அக்கட்சிக்கு அவர் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்தார். ஆனால், திராவிடர் கழகம் வாக்கரசியலில் பஞ்கேற்காது என்பதில் தீர்மானமாக இருந்தார்.

ட்ஃப

இருந்தாலும், சமூகத்தில் சமதர்மமும், சமத்துவமும் தவறும்போது திராவிடர் கழகம் முழு மூச்சாக களமாடியது. இந்தச் சூழலில் பெரியாருடன் அண்ணாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திராவிடர் கழகத்திலிருந்து அவர் வெளியேறினார்.

பேரறிஞர் அண்ணாதுரை (திமுக):

தந்தை பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பேரறிஞர் அண்ணா 1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார். கட்சியைத் தொடங்கினாலும் கட்சியின் தலைவருக்கான நாற்காலி பெரியாருக்கானது என்றே அவர் கூறினார்.

1952ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் இருந்த திமுக 1957ஆம் ஆண்டு தேர்தலில் முதல்முறையாக களம் கண்டது. இத்தேர்தலில் கட்சியின் தலைவர் பேரறிஞர் அண்ணா காஞ்சிபுரத்தில் சேவல் சின்னத்திலும், கருணாநிதி உதயசூரியன் சின்னத்தில் குளித்தலையிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

ஃப்டச்

1962ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சியாக கோட்டைக்குள் நுழைந்த திமுக 1967ஆம் ஆண்டு தேர்தலில் வென்று முதல்முறையாக ஆட்சியமைத்தது.

பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். அவரது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு முற்போக்கு மாநிலம் என்று பிற மாநிலங்களிடம் தன்னை உறுதிப்படுத்திக்கொண்டது. ஆனால் ஆட்சியில் இருக்கும்போதே 1969ஆம் ஆண்டு அண்ணா உயிரிழந்தார்.

அண்ணாவின் இறுதி ஊர்வலம்
அண்ணாவின் இறுதி ஊர்வலம்

அண்ணாவின் மறைவையடுத்து திமுகவில் தலைவர் என்ற பதவி உருவாக்கப்பட்டு மு. கருணாநிதி அக்கட்சியின் தலைவராகவும், நாவலர் நெடுஞ்செழியன் பொதுச்செயலாளராகவும் பதவியேற்றனர். மேலும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

எம்ஜிஆர் (அதிமுக):

எம்ஜிஆர் ஆரம்பத்திலிருந்தே திமுகவின் ஆதரவாளராகவே இயங்கிவந்தார். திமுகவின் பொருளாளராக இருந்த அவர் அண்ணா மறைவுக்கு பிறகு கட்சி தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக 1972ஆம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகினார்.

இதனையடுத்து அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர், அதிமுக என்ற பெயரில் பதிவு செய்து வைத்திருந்த கட்சியில் தம்மை இணைத்துக்கொண்டார்.

ஃபட்

அப்போது, ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்துக்கொண்டேன்’ என அறிவித்தார். ஆனால் அதன் பின்னர் 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' (அ.இ.அ‌.தி.மு.க.) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனை முதலில் கட்சிக்குள் பலரும் ஏற்றுக்கொள்ளாத சூழலில் ஒருவழியாக பெயர் மாற்றத்தை ஏற்றுக்கொண்டனர்.

அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி கொடுத்த நெருக்குதல் காரணமாகவே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகமாக மாறியது என்ற விமர்சனம் இன்றளவும் வைக்கப்படுகிறது.

ட்ஃபச்

அதிமுக, 1973ஆம் ஆண்டு நடந்த திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் முதல்முறையாக களமிறங்கி வெற்றி பெற்றது. அதன் பிறகு நடந்த 1977ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 1987ஆம் ஆண்டுவரை பத்து ஆண்டுகள் தமிழ்நாட்டை எம்ஜிஆர் ஆட்சி செய்தார். 1987ஆம் ஆண்டு எம்ஜிஆர் உயிரிழந்தார். இந்த இடைப்பட்ட காலம் திமுகவுக்கும், அதன் தலைவர் கருணாநிதிக்கும் வனவாசமாக அமைந்தது.

வைகோ (மதிமுக):

பெரியாரின் தளபதியாக அண்ணா இருந்ததுபோல், அண்ணாவின் தளபதியாக கருணாநிதி இருந்ததுபோல், கருணாநிதியின் தளபதியாக வைகோ இருந்தார். ஆனால், திராவிட இயக்கங்களுக்குள் தலைவருக்கும் தளபதிக்கும் எழும் கருத்து வேறுபாடு கருணாநிதி, வைகோவையும் விட்டுவைக்கவில்லை.

1989ஆம் ஆண்டு வைகோ எம்.பியாக இருந்தபோது திமுகவின் தலைமையிடம் அனுமதி பெறாமல் ஈழத்திற்கு சென்று விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சந்தித்தார். இந்த விஷயம் வெளியில் தெரிந்து பெரும் சர்ச்சை வெடித்ததும் அவர் கட்சி தலைமையிடம் மன்னிப்பு கோரினார். ஆனால், அதன் பிறகுதான் அவர் படிப்படியாக கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் என்று ஒருதரப்பினர் கூறுகின்றனர்.

ட்ஃபச்

இப்படிப்பட்ட நிலையில், 1993ஆம் ஆண்டு வைகோவின் ஆதாயத்திற்காக விடுதலைப் புலிகள் கருணாநிதியை கொல்ல திட்டம் தீட்டியிருப்பதாக அப்போதைய தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியதும், கருணாநிதி வைகோ மீது குற்றஞ்சாட்டியதும் திமுகவுக்குள் பெரும் பூகம்பமாக வெடித்தது.

இதனால், கருணாநிதியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வைகோ திமுகவிலிருந்து வெளியேறி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை 1994ஆம் ஆண்டு மே ஆறாம் தேதி தொடங்கினார். வைகோ திமுகவிலிருந்து வெளியேறியபோது 9 மாவட்ட செயலாளர்களும் ஏராளமான தொண்டர்களும் அவருடன் வெளியேறினர். எனவே, அறிவாலயம் ஆடிப்போனது என்று அப்போது பேசப்பட்டது.

ஃபட்

தலைவர் கலைஞர் வயது முதிர்ந்த நிலையில் கோபாலபுரம் வீட்டில் சிலவருடங்கள் ஓய்வெடுத்த நிலையில், அவரைச் சந்தித்த வைகோ, கலைஞரின் கையைப் பிடித்து, உங்களுக்கு இருந்தது போல் ஸ்டாலினுக்கும் துணையாக இருப்பேன் என்றார் அந்த வார்த்தைகளை நான் எப்போதும் மறவேன் - ஸ்டாலின்

1996ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட், ஜனதா தளம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மதிமுக போட்டியிட்டது. ஆனால், அத்தேர்தலில் திமுக - தமாகா கூட்டணி வெற்றி பெற்றது. அதே ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும் மதிமுக தோல்வி அடைந்தது.

1998ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் வைகோ கூட்டணி அமைத்ததால் வைகோ விமர்சனத்தை சந்தித்தாலும் மத்தியில் வாஜ்பாய் ஆட்சிக்கு மதிமுக ஆதரவு தெரிவித்தது. இருந்தாலும் வாஜ்பாய் ஆட்சி ஜெயலலிதாவால் கலைக்கப்பட்டதும் 1999ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் முதல்முதலாக கூட்டணி அமைத்தார் வைகோ.

ட்ஃபச்

2001ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு வைகோ பொடாவில் கைது செய்யப்பட்டார். 18 மாத சிறைக்கு பிறகு வெளியில் வந்த வைகோ 2006ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடனேயே கூட்டணி வைத்தார். 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று வைகோ அறிவித்த பிறகு எல். கணேசன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து விலகினர்.

அதன் பிறகு நடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நல கூட்டணி அமைய வைகோவே பிரதான காரணமாக இருந்தார். ஆனால் அத்தேர்தலில் அந்தக் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. தற்போது நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலினுடன் கை கோர்த்துள்ளார் வைகோ.

ராமதாஸ் (பாமக):

வன்னியர் சமுதாய மக்களின் நலனுக்காக வன்னியர் சங்கம் மருத்துவர் ராமதாஸால் ஆரம்பிக்கப்பட்டது. 1987ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் ஒரு வாரம் நடத்திய இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் மக்களின் கவனத்தை அந்தச் சங்கத்தின் மீது திருப்பியது.

அதன் பிறகு வாக்கரசியலில் பங்கேற்பதற்காக வன்னியர் சங்கம் பாட்டாளி மக்கள் கட்சி என்று 1989ஆம் ஆண்டு உருவெடுத்தது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டிலேயே நடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

மருத்துவர் ராமதாஸ்
மருத்துவர் ராமதாஸ்

பின் 1991ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்டதில் அக்கட்சியின் பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டுமே வெற்றி பெற்றார். அத்தேர்தலில் யானை சின்னத்தில் ராமச்சந்திரன் போட்டியிட்டு வென்றதால் அவரை யானை மீது அமரவைத்து சட்டப்பேரவைக்கு அனுப்பியது கட்சியின் தலைமை.

அதன் பிறகு நடந்த 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாழப்பாடி ராமமூர்த்தியின் திவாரி காங்கிரஸ் கட்சியோடு மட்டுமே கூட்டணி வைத்து நான்கு இடங்களை வென்றது பாமக.

ட்ஃபச்

அடுத்து நடந்த தேர்தல்களில் திமுகவுடனோ இல்லை அதிமுகவுடனோ மாறி மாறி கூட்டணி வைத்திருக்கிறது பாமக. மேலும், திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த ராமதாஸ் தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.

திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி):

மகாராஷ்டிர மாநிலத்தில் 1970களில் ஆரம்பிக்கப்பட்ட தலித் சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டிலும் தலித் சிறுத்தைகள் இயக்கம் என்ற பெயரிலேயே மலைச்சாமி என்பவரால் தொடங்கப்பட்டது.

மாநில தலைவராக இருந்த மலைச்சாமி இறந்த பிறகு மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தொல். திருமாவளவன் அதன் அமைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்று பெயர் மாற்றம் செய்தார். நீலம், சிவப்பு, நட்சத்திரம் பொருந்திய இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அமைப்பின் கொடி 1990ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஃபட்

1991ஆம் ஆண்டு அந்த அமைப்பு விடுதலைச் சிறுத்தைகள் என்ற பெயர் மாற்றத்தை மீண்டும் பெற்று வாக்கரசியலில் பங்கெடுக்க முடிவு செய்ததையடுத்து 1999ஆம் ஆண்டு தனது அரசு பணியை திருமா துறந்தார்.

இதனையடுத்து அந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தமாகாவுக்கு விசிக ஆதரவு தெரிவித்தது. 2001ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கைகோர்த்து மங்களூர் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டார்.

வெற்றி பெற்று எம்.எல்.ஏவான அவர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு திமுக உரிய அரசியல் அங்கீகாரம் தர மறுக்கிறது என கூறி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து கூட்டணியிலிருந்து விலகினார்.

2006ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது விசிக. தேர்தலில் வென்று, கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளர் செல்வப் பெருந்தகையும், ரவிக்குமாரும் எம்.எல்.ஏவானார்கள்.

ஃபட்

இதன் பிறகு 2009ஆம் நடந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைத்து சிதம்பரம் தொகுதி எம்.பியானார் திருமாவளவன். 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும் அதே கூட்டணியில் அதே தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார்.

பிறகு 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் பங்கேற்று காட்டுமன்னார் கோவிலில் போட்டியிட்டு வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். திமுகவின் கூட்டணியில் தற்போது அங்கம் வகிக்கிறார்.

2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக இருக்கிறார். சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே கூட்டணியில் விசிக தொடர்வதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. பாஜகவின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றுகூட வேண்டுமென்ற முழக்கத்தோடு திருமாவளவன் களப்பணியாற்றிவருகிறார்.

விஜயகாந்த் (தேமுதிக):

திமுக தலைவர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்த விஜயகாந்த் அரசியல் பிரவேசம் செய்தார். 2005ஆம் ஆண்டு கட்சி தொடங்கிய அவருக்கு பரவலான ஆதரவு இருந்தது. அதற்கு அடுத்த ஆண்டு (2006) நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிகவில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும் தேமுதிக அந்தத் தேர்தலில் பெற்ற வாக்கு வங்கி திமுக, அதிமுக இரு கட்சிகளின் பார்வையையும் தேமுதிக மீது திருப்பியது. 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராக செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் நுழைந்தார்.

ஃப

அதிமுகவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கூட்டணியிலிருந்து வெளியேறிய அவர் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த்துக்காக அறிவாலயம் காத்திருந்தது. அறிவாலயத்துக்குள் விஜயகாந்த் நுழைவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட சூழலில் மக்கள் நல கூட்டணியில் அக்கட்சி இடம்பிடித்து விஜயகாந்த் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அத்தேர்தலில் தேமுதிக கடுமையான தோல்வியைச் சந்தித்தது.

இப்போது அதிமுகவுடன் தேமுதிக கூட்டணியில் இருந்தாலும் அதிமுக கூட்டணியில் கண்டுகொள்ளப்படாத கட்சியாகவே தேமுதிக நீடிப்பதாக தகவல் வெளியாகிறது. கட்சி ஆரம்பித்து ஐந்து வருடங்களிலேயே எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் இன்று கண்டுகொள்ளப்படாமல் இருப்பதற்கு சென்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் அங்கம் வகித்ததே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்:

ரஷ்யாவில் புரட்சியாளர் லெனின் தலைமையில் 1917ஆம் ஆண்டு புரட்சி வெடித்து அங்கு உழைக்கும் மக்களின் ஆட்சி அமைந்தது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் 1920ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது.

1925ஆம் ஆண்டு கான்பூரில் நடந்த அக்கட்சியின் முதல் மாநாட்டுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த சிங்காரவேலர் தலைமை தாங்கினார். கம்யூனிஸ சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய பகத் சிங் தூக்கிலிடப்பட்ட பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும்பாலான இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொண்டனர்

புரட்சியாளர் லெனின்
புரட்சியாளர் லெனின்

1952ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் 62 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. அடுத்த நடந்த 1957 தேர்தலில் 62 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், காங்கிரஸ் கட்சியை இந்திய கம்யூனிஸ்ட் தீவிரமாக எதிர்க்கவில்லை என்று சிலர் அக்கட்சியிலிருந்து பிரிந்து இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) ன்ற புதிய கட்சியை தொடங்கியதாக கூறப்பட்டது.

இருப்பினும், ரஷ்யாவும், சீனாவும் கம்யூனிசத்தை வெவ்வேறு விதங்களில் அணுகியதால் அதனடிப்படையில்தான் கம்யூனிஸ்ட் பிரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், ரஷ்யாவின் ஆதரவு நிலைப்பாட்டை இந்திய கம்யூனிஸ்ட்டும், சீனாவின் ஆதரவு நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எடுத்தன என்கின்றனர் ஒரு பிரிவினர்.

1967ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் இருந்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திராவிட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து தேர்தல்களை சந்திக்கின்றன. 1952ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் முதல் 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்வரை கோட்டைக்குள் நுழையாமல் கம்யூனிஸ்ட்கள் இருந்ததில்லை.

dfas

ஆனால், கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நல கூட்டணியில் இடம்பெற்ற கம்யூனிஸ்ட்கள் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. அதுகுறித்து, அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி, கம்யூனிஸ்ட்கள் இல்லாமல் அமைந்த முதல் சட்டப்பேரவை குறித்து தனது ஆதங்கத்தையும், வருத்தத்தையும் தெரிவித்தார்.

அதிமுக, பாமகவை தவிர்த்து மேற்கூறிய அனைத்து கட்சிகளும் திமுகவுடன் தற்போது கூட்டணியில் இருக்கின்றன. அதேபோல், அதிமுகவுடன் பாமகவும் இப்போது கைகோர்த்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகளுடனேயே மற்ற கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட்டு கோட்டைக்குள் நுழைந்திருக்கின்றன.

ட்ஃப

இந்த இரண்டு கட்சிகளைத் தவிர்ப்பதோ, இல்லை அவற்றை தனித்து எதிர்ப்பதோ இயலாத காரியம் என்றே கடந்த கால தேர்தல் வரலாறுகளும், கட்சிகளின் வரலாறுகளும் எடுத்துரைக்கின்றன. நடக்கவிருக்கும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய இரண்டு கட்சிகளும் திமுக, அதிமுகவைக் காத்திரமாக எதிர்க்கின்றன.

ஆனால், கடந்த கால வரலாறு எடுக்கும் பாடத்தால் இப்போதைய தேர்தலில் திமுக, அதிமுகவை இரண்டு கட்சிகளும் இணைந்து எதிர்க்குமா இல்லை மநீமவும், நாம் தமிழரும் தனித்தனியாக எதிர்க்குமா என்பது இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்.

Last Updated : Feb 27, 2021, 7:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.