இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில், "இந்திய குடியரசு கட்சியின் (கவாய் பிரிவு) முன்னாள் மாநிலத் தலைவர் சக்திதாசன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (10.12.2020) காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன்.
சக்திதாசன் இளம் வயதில் சமூக பணியாற்ற ஆர்வம் கொண்டு, பொது வாழ்க்கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர். ஷெட்யூல்டுஇன மக்கள் விடுதலை என்ற ஒரு இயக்கத்தினை துவங்கி மக்கள் பணியாற்றியவர்.
எம்.ஜி.ஆர், அதிமுக கட்சியை தோற்றுவித்து சட்டமன்ற மேலவைத் தேர்தலில் அதிமுகவின் முதல் வேட்பாளராக நிறுத்தி பெருமைப்படுத்திய புகழுக்குரியவர் சக்திதாசன்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சக்திதாசனை கௌரவிக்கும் வண்ணம், 2004ஆம் ஆண்டு அவருக்கு அம்பேத்கர் விருது வழங்கி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
சக்திதாசனின் மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், அவரது கட்சியினருக்கும், பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.