த.மா.கா.வின் துணைத் தலைவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான பி.எஸ்.ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:
தமிழ் மாநில காங்கிரஸின் துணை தலைவர் ஞானதேசிகன் இயற்கை எய்தினார் எனும் துயர செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அன்னாரின் ஆன்மா இறைவனடியில் இளைப்பாற பிரார்த்தனை செய்வதோடு குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக தலைவர் ஸ்டாலின்:
தமாகா துணைத் தலைவரும் தலைவர் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான ஞானதேசிகன் மறைவெய்தியதை அறிந்து மிகுந்த மனவேதனைக்குள்ளானேன். இந்திய, தமிழக அரசியலில் பெரும்பங்காற்றிய அவர் நம் நெஞ்சங்களில் என்றும் நீங்கா இடம் கொண்டவர். அவரை பிரிந்து வாடும் உற்றார் உறவினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்:
ஞானதேசிகன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். யாருடைய மனமும் புண்படாமல் பேசும் சிறந்த பண்பாளர் இயக்கங்களின் எல்லைகளைத் தாண்டி நட்பு பாராட்டியவர் தற்போது இல்லை என்பது வருத்தமளிக்கிறது