ETV Bharat / state

பாதுகாப்பு வேண்டி முருகன் தரப்பில் மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - accused murugan seeks police protection

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய முருகன் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்காக சென்னை சென்றுவர, தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரிய மனுவுக்கு, இம்மாதம் 30ஆம் தேதிக்குள் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 10:38 PM IST

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டி விடுதலை செய்து உச்ச நீதிமன்றம், கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இலங்கை நாட்டுக் குடியுரிமை பெற்ற முருகன் திருச்சியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முருகன் சார்பில் அவரது மனைவி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் சொந்த நாட்டிற்குச் செல்லும் வரை வெளியே செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாகவும், உயர் பாதுகாப்பு சிறைகளை விட முகாமில் நிலைமைகள் மற்றும் சூழ்நிலைகள் கடுமையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் லண்டனில் வசிக்கும் தங்களின் மகளுடன் இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், தற்போதைய நிலையில் முருகனுடைய சொந்த நாடான இலங்கையில் அவரது உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதால், அங்குச் செல்ல முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சர்வதேச பாஸ்போர்ட்டை பெற சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்திற்குச் செல்வதற்காகச் சிறப்பு முகாமிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கவும், அங்குச் சென்று வர தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் தமிழக அரசிற்கும், வெளிநாட்டினர் பதிவு மண்டல அலுவலருக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தனபால் அமர்வு, மத்திய மாநில அரசுகள் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கில் 80% விசாரணை நிறைவு: உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.