ETV Bharat / state

கழகத்திற்கு களங்கம் விளைவித்தாக கூறி அதிமுக நிர்வாகிகள் 5 பேர் கட்சியிலிருந்து நீக்கம் - சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அதிமுக நிர்வாகிகள் ஐந்துபேரை கட்சியிலிருந்து நீக்கம்

சென்னை: சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அதிமுக நிர்வாகிகள் ஐந்துபேரை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

AIADMK
AIADMK
author img

By

Published : Jun 25, 2021, 10:16 PM IST

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறுகையில், "கட்சியின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக்கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் ஈரோடு புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிந்து ரவிச்சந்திரன் (கழக வர்த்தக அணிச் செயலாளர்), கே.ஆர். கந்தசாமி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் (ஈரோடு புறகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்), எஸ்.பி. ரமேஷ் (ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்), டாக்டர். வி.சி. வரதராஜ் (சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்), பி.கே. காளியப்பன் (கோபிசெட்டிபாளையம் நகரக் கழகச் செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கட்சியுடன் பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறோம்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

f
அதிமுக செய்தியறிக்கை

இதையும் படிங்க: அதிமுக எச்சரிக்கை: 17 நிர்வாகிகள் நீக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.