ETV Bharat / state

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்!

author img

By

Published : Feb 24, 2021, 9:48 PM IST

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாள் இன்று (பிப்.24) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பின்னர் அவர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இலவச மருத்துவ முகாம் போன்றவற்றை தொடங்கி வைத்தனர். குறிப்பாக 'நமது புரட்சித் தலைவி அம்மா' என்ற பெயரில் ஜெயலலிதா பிறந்த நாள் சிறப்பு மலரையும் அவர்கள் வெளியிட்டனர்.

மேலும் அதிமுக சார்பில் 73 கிலோ எடை கொண்ட கேக் வெட்டப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: 'பெண்கள் அவர்களுக்கான அதிகாரங்களைப் பெற பாடுபட்டவர் ஜெ.!' - பிரதமர் மோடி புகழாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.