ETV Bharat / state

பெண்களும் அரசியலில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் ஜெயலலிதா - தெலங்கானா ஆளுநர் தமிழிசை

author img

By

Published : Feb 24, 2022, 4:04 PM IST

பெண்களும் அரசியலில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் ஜெயலலிதா என தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன்
தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை மெரினா காமராஜர் சாலையிலுள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள, அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறையின் செயலாளர் மகேஷன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஜெயசீலன் ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜனும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, “ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மரியாதை செலுத்தியதில் பெருமை கொள்கிறேன்.

பெண்கள் என்றால் பணிந்து இருக்க வேண்டும் என்பது இல்லை. துணிந்து பணியாற்றவேண்டும் என்பதை உணர்த்தியவர் ஜெயலலிதா. பெண்களும் அரசியலில் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் என்பதால், அவரின் ஆளுமை எனக்குப் பிடிக்கும். இன்றைய தினம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தினேன்” என்றார்.

இதனைத் தொடரந்து முன்னாள் அதிமுக நிர்வாகி பெங்களூரு புகழேந்தி தனது ஆதரவாளர்களுடன் வந்து ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.