ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் லெட்சியா (29) என்பவர், சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் விடுதியில் கடந்த ஒரு வருடமாக தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த விடுதியின் பொதுமேலாளர் ரவி என்பவர், லெட்சியாவின் செல்ஃபோன் எண்ணிற்கு தவறான எண்ணத்தில் குறுஞ்செய்தி அனுப்பி, தினமும் தொந்தரவு செய்துவந்தார். இதனால், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் லெட்சியா புகார் அளித்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சாக்லெட் கொடுத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; இளைஞருக்கு வலைவீச்சு!