திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து கடத்திச் செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று (ஜனவரி 16) திருச்சி விமான நிலையத்தில் இருந்து சார்ஜா செல்வதற்காக ஏர் இந்தியா விமானம் தயார் நிலையில் இருந்தது.
இதில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான ஆண் பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்ததில் அதில் கருப்பு டேப் சுற்றப்பட்ட உருளை வடிவிலான ஒரு பொருளை பிரித்துப் பார்த்தபோது அதில் 6,000 அமெரிக்க டாலர்கள், 2,000 சவுதி ரியால்கள், 7,995 துபாய் திர்கம்கள் இருந்தது. இதையடுத்து அந்த கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் இந்திய மதிப்பு ரூ. 7 லட்சத்து 9 ஆயிரத்து 90 ரூபாய் என்பது முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை உதயநிதி தொடங்கி வைத்தார்