ETV Bharat / state

புதுப்பேட்டை  தனியார் உணவகத்தில் திடீர் சோதனை! - சென்னை

சென்னை: புதுப்பேட்டையில் உள்ள தனியார் உணவகத்தில் உணவு பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர்.

Foodsafety raid
author img

By

Published : Oct 29, 2019, 4:55 PM IST

சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்களை விற்பனை செய்வதாகவும் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்துவதாகவும் சென்னை புதுப்பேட்டையில் உள்ள தனியார் உணவகத்தின் (Friends Fast Food) மீது எழுந்த புகாரையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள் அந்த உணவகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

திடீர் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்

இந்த உணவகத்திற்கு நேற்றிரவு உணவருந்த வந்த ஆயுதப்படை காவலர், கடையில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்படுத்துவதைக் கண்டு கடை உரிமையாளரிடம் கேள்வி கேட்டபோது, அந்த உரிமையாளர் மிரட்டும் தொணியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்தக் காவலர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட செய்தி வைரலாகப் பரவியது. இதனையடுத்து எழுந்த புகாரின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இந்தச் சோதனையில் உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதும், நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதும் உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து சுகாதாரத் துறை அலுவலர்கள் கடை உரிமையாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு கடை உரிமத்தை ரத்து செய்தனர்.

மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் வாசுதேவன் செய்தியாளர் சந்திப்பு

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் வாசுதேவன், இதுபோன்ற சுகாதாரமற்ற உணவுப் பொருள்களையோ நெகிழிப் பைகளையோ பயன்படுத்தும் உணவகங்கள் குறித்து பொதுமக்கள் தங்களிடம் புகார் அளிக்கலாம் எனவும் புகாரை தெரிவிக்க 94440 42322 என்ற இலவச எண்ணைத் தொடர்புகொள்ளலாம் எனவும் கூறினார்.

இதையும் படிங்க:
குடிபோதையில் தகராறு: ஒருவர் கொலை!

Intro:Body:சென்னை - உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை*

சென்னை புதுப்பேட்டையில் உள்ள தனியார் உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாகவும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்துவதாகவும் சென்னை புதுப்பேட்டையில் உள்ள தனியார் உணவகத்தின் (Friends Fast Food) மீது எழுந்த புகாரையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த உணவகத்திற்கு நேற்றிரவு உணவருந்த வந்த ஆயுதப்படை காவலர், கடையில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகளை பயன்படுத்துவதைக் கண்டு கடை உரிமையாளரிடம் கேள்வி கேட்டபோது, அந்த உரிமையாளர் ஆயுதப்படை காவலரிடம் மிரட்டும் தொணியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த காவலர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட செய்தி வைரலாக பரவியது. இதனையடுத்து எழுந்த புகாரின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த சோதனையில் உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும், நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுவதும் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கடை உரிமையாளருக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்ததோடு கடை உரிமத்தை ரத்து செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி வாசுதேவன், இதுபோன்ற சுகாதாரமற்ற உணவுப் பொருட்களையோ, நெகிழிப் பைகளையோ பயன்படுத்தும் உணவகங்கள் குறித்து பொதுமக்கள் தங்களிடம் புகார் அளிக்கலாம் எனவும், புகாரை தெரிவிக்க 94440 42322 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் கூறினார்.

(பேட்டி - வாசுதேவன் - மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.