ETV Bharat / state

மாதவரம் தற்காலிக பழச் சந்தையில் கடைகள் மாற்றம் - வியாபாரிகள் போராட்டம் - தற்காலிகப் பழ சந்தை

திருவள்ளூர்: மாதவரத்தில் உள்ள தற்காலிக பழச் சந்தையில் கடைகளை மாற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

flower-fruit-merchants-protest
flower-fruit-merchants-protest
author img

By

Published : Jun 13, 2020, 7:34 PM IST

கோயம்பேடு சந்தையில் கரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக, அச்சந்தையின் காய்கறி விற்பனை திருமழிசைக்கும், பூ, பழங்கள் ஆகியவற்றின் விற்பனை மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திற்கும் மாற்றப்பட்டன. அதில் மாதவரம் பழ வியாபாரிகளுக்கு 200 கடைகளை பெருநகர சென்னை வளர்ச்சிக் குழுமம் ஒதுக்கீடு செய்தது.

இந்த நிலையில், சென்னையில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால், அங்கு செயல்பட்டுவரும் 200 கடைகளில் 100 கடைகளை மேல்தளத்திற்கு மாற்ற குலுக்கல் முறையை வளர்ச்சிக் குழுமம் தேர்வுசெய்தது. நேற்று காலை 11 மணியளவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அப்போது பேசிய அவர்கள், "கோயம்பேட்டில் மொத்தம் 830 கடைகள் செயல்பட்டுவந்த நிலையில், அவற்றில் 200 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது அவற்றையும் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நாளொன்றுக்கு 100 கடைகளுக்கு அனுமதியளித்தால் எங்களுக்குள் சுழற்சி முறையில் விற்பனை செய்து கொள்வோம்" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கோயம்பேடு போன்ற அடுத்த ’ஹாட் ஸ்பாட்’ தலைமைச் செயலகமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.