சென்னை : தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழை தேங்காமல் இருக்க மழை நீர் வடிகால் பணிகள் தாம்பரம் மாநகராட்சி முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று (நவ.05) காலை முதல் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் இடங்களை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
பல்லாவரம், துரைப்பாக்கம் ரேடியன் சாலை, சேலையூர் IAF சாலை , TTK நகர், பாம்பன் கால்வாய் ஆகிய பகுதிகளில் சீரமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களை அடையாறு ஆறுடன் இணைக்கும் பகுதிகளையும் பார்வையிட்டு மழைக்காலங்களில் மேற்பட வேண்டிய நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்.
மேலும், மழைநீர் வடிகால் பணிகளை பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்தி தரமாக முடிக்க வேண்டும் மழைநீர் கால்வாய் பணிகள் முடிவடைந்த பகுதிகளில் உடனடியாக பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாலைகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ரகுநாத், தாம்பரம் மற்றும் பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர்கள், தாம்பரம் மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க : சென்னையில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணி தீவிரம் - குடிநீர் வாரியம்