நிவர் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கருதி நேற்று (நவ.25) இரவு 7 மணியில் இருந்து இன்று (நவ.26) காலை 7 மணி வரை சென்னை விமான நிலையம் தற்காலிமாக மூடப்பட்டது. இதன் காரணமாக இரவு 7 மணிக்கு பின்னர் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்று (நவ.26) காலை 6 மணி முதல் டெல்லி, அந்தமான், அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு செல்ல பயணிகள் வந்தனர். இதையடுத்து, காற்று அதிகமாக வீசுவதால் விமான போக்குவரத்து 9 மணிக்கு தொடங்கப்படும் என விமான நிலையத்தில் இருக்கும் அலுவலர்கள் தெரிவித்தனர். அதன்படி சென்னை விமானநிலையத்தில் இன்று காலை விமான சேவை மீண்டும் தொடங்கியது.
இதையும் படிங்க:கொட்டும் மழையில் அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு!