2020ஆம் ஆண்டிற்கான விமான பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை காணொலி வாயிலாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் தலைவர் எஸ்.எச். அரவிந்த் சிங் தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் சிங், "கரோனா காலகட்டங்களில் விமான போக்குவரத்து சேவை மிக குறைந்த அளவில் மட்டுமே இயக்கப்பட்டது. உள்நாட்டு விமான சேவைகளும் மிகக் குறைந்த அளவில் மட்டுமே இயக்கப்பட்டன.
முந்தைய ஆண்டைவிட இந்தாண்டு விமான நிலையங்களில் விலங்குகள், பறவைகளின் அச்சுறுத்தல் அதிகமாகவே காணப்படுகிறது. விமான போக்குவரத்து அளவைப் பொருட்படுத்தாமல் பாதுகாப்புத் தடுப்பு நடவடிக்கையைத் தடையின்றி தொடர வேண்டும் என்ற நோக்கில் ஒருவார விழிப்புணர்வு நிகழ்வு தொடங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் எஸ்.எச். மனிஷ் குமார் டிடிஜி கலந்துகொண்டு விமான பாதுகாப்பைச் சிறப்பாக நிர்வகிப்பது குறித்து கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.